சண்டையை தடுத்தவருக்கு கட்டையால் மண்டை உடைப்பு…

முத்துப்பேட்டை பேட்டையில் சண்டையை தடுத்து விலக்கியவருக்கு மண்டை உடைப்பு.

பேட்டை பகுதியை சார்ந்தவர்கள் பழனிதுரை மற்றும் முனியகண்ணன். இருவரும் அப்பகுதியில் தகராறில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் சண்டையிட்டு கொண்டனர். அப்போது இந்த சண்டையை பார்த்த முஹம்மத் ரசித்கான் என்ற இளைஞர் மனிதாபிமான அடிப்படையில் அவர்களை தடுக்க சென்றுள்ளார். இதில் பழனிதுரை ஆத்திரத்தில் ரசித்கானை மண்டையில் கட்டையை வைத்து பலமாக தாக்கியுள்ளார்.

இதனை அடுத்து ரசித்கான் மண்டை உடைந்து படுகாயம் ஏற்பட்டது. உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக முத்துப்பேட்டை காவல்துறை வழக்கு பதிவு செய்து பழனிதுரையை தேடி வருகின்றனர்.

மனிதாபிமான அடிப்படையில் சண்டையை தடுக்க சென்றவருக்கு அரங்கேறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.