களைகட்டிய முகைதீன் பள்ளி திடல் வார சந்தை…

முத்துப்பேட்டையில் முகைதீன் பள்ளி திடலில் களைகட்டியது புதிதாக தொடங்கப்பட்ட வாரசந்தை.

முத்துப்பேட்டை நகர பொதுமக்கள் குறிப்பாக தெற்கு தெரு, பேட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சந்தைக்கு செல்ல நீண்ட நேரம் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதில் வயதானோர் மற்றும் உடல்நிலை சரி இல்லாதோர் என அனைவரும் பொதுவாக சிரமத்தை சந்தித்து வந்தனர். இதனை கருத்தில் கொண்டு முத்துப்பேட்டை நகர மையபகுதியான முகைதீன் பள்ளிவாசல் எதிரே உள்ள திடலில் முத்துப்பேட்டை தகவல் தளம் சார்பாக நேற்று முதல் வார சந்தை தொடங்கப்பட்டது.

முதல் நாளான நேற்று அனைத்து தரப்பு மக்களும் சந்தைக்கு சென்று மகிழ்ச்சியுடன் பொருட்கள் வாங்கி சென்றனர். சந்தையில் வீட்டுக்கு தேவையான பொருட்கள், காய்கறிகள், பழவகைகள், இயற்கை மூலிகை பொருட்கள் மற்றும் ஆடை, அணிகலன்கள் என எண்ணற்ற பொருட்கள் இடம் பெற்றிருந்தன. பொதுமக்கள் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் பொருட்களை சிரமம் இல்லாமல் வாங்கி சென்றனர்.

முத்துப்பேட்டை நகர உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர்கள் தங்கள் பொருட்களை நேரடியாக சந்தையிடுவதால் தரமான பொருட்களை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தனர். மேலும், இனி வரக்கூடிய வாரங்களில் பல்வகை பொருட்கள் அதிகமாக இடம் பெறும் என ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.