கழிவுடன் கலந்து ஓடிய குடிநீர் தற்போது சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது…

முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் அருகே பல நாட்களாக சரி செய்யப்படாமல் இருந்த குடிநீர் குழாயில் ஏற்பட்ட கசிவு சரி செய்யப்பட்டு வருகிறது.

பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள பாலத்தில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக தண்ணீர் வீணாகி கழிவுநீரோடு கலந்து வந்தது. இந்நிலையில் தற்போது அந்த குடிநீர் இணைப்புகள் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகளால் சரி செய்யப்பட்டு வருகிறது.

அதற்காக சாலை ஓரத்தில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து சற்று பாதித்துள்ளது. போலீஸார் உதவியுடன் வாகனங்கள் ஒரு பக்கமாக இயக்கப்பட்டு வருகின்றது.