முத்துப்பேட்டை ECR சாலையில் கத்தியை காட்டி வழிப்பறி...

முத்துப்பேட்டை ECR சாலையில் கத்தியை காட்டி வழிப்பறி சம்பவம் அரங்கேறியுள்ளது.

முத்துப்பேட்டை ஆலங்காடு பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவர் நேற்று முத்துப்பேட்டையிலிருந்து ஆலங்காட்டிற்கு தனது வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது ECR ரயில்வே மேம்பாலத்தில் நின்றுகொண்டிருந்த மணிகண்டன் என்ற இளைஞர் கத்தியை காட்டி மோட்டார் சைக்கிளை நிறுத்தி மிரட்டி அவர் வைத்திருந்த பணத்தை பறித்து கொண்டு, உடனே அந்த இடத்தை விட்டு மணிகண்டன் தப்பினார்.

இச்சம்பவம் தொடர்பாக மனோகரன் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்த போலீசார் அவரை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

வழிப்பறியில் ஈடுபட்ட மணிகண்டன் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. முத்துப்பேட்டை முக்கிய சாலையில் நடந்த இந்த வழிப்பறி பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.