முத்துப்பேட்டை 5வது வார்டு பகுதியில் மின்விளக்கு அமைக்கப்பட்டது.!

முத்துப்பேட்டை 5வது வார்டு (ராமஜெயம் மண்டபம் சாலை) பகுதியில் நீண்ட நாட்களாக மின்விளக்கு இல்லாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

இந்நிலையில், இந்த பகுதியில் சில இடங்களில் மின்விளக்கு பொருத்தும் பணி நேற்று மாலை சுமார் 4.00 மணியளவில் நடைபெற்றது. இதில், 30 வாட்ஸ் அதிக வெளிச்சம் கொண்ட தெருவிளக்குகள் அமைக்கப்பட்டது. இதனால் தற்போது இந்த சாலை மக்கள் பயன்படுத்துவதற்கு ஏற்றதாகவும் உள்ளது.

மேலும், இந்த சாலையில் தெருவிளக்கு அமைக்க மக்கள் நீண்ட நாள் கோரிக்கை வைத்துவந்தது குறிப்பிடத்தக்கது.