சுகாதார துறை ஆய்வு – பிளாஸ்டிக் பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு செக்…

முத்துப்பேட்டை அருகே எடையூர் பகுதி கடைகளில் சுகாதார துறையினர் திடீர் ஆய்வு.

தமிழகத்தில் பிளாஸ்டிக் மற்றும் புகையிலை பொருட்களுக்கான தடை பிறப்பிக்கப்பட்டும் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் நடைமுறைக்கு வராமல் இருப்பதால் சுகாதார துறை அதிகாரிகள் அடிக்கடி திடீர் ஆய்வுகளில் ஈடுபடுவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் எடையூர் சங்கேந்தி பகுதியில் உள்ள கடைகளில் முத்துப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் கிள்ளிவளவன் அவர்களின் உத்தரவின் பேரில் சுகாதார துறை அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆய்வில் பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் மற்றும் புகையிலை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனைக்கு பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவர்களுக்கு பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வும் செய்யப்பட்டது.

சுகாதார துறை அதிகாரிகளின் திடீர் ஆய்வு காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.