முறிந்து நிற்கும் மின் கம்பியால் பொதுமக்கள் அச்சம்…

முத்துப்பேட்டை மரைக்காயர் தெருவில் முறிந்து நிற்கும் மின் கம்பியால் பொதுமக்கள் அச்சம்.

முத்துப்பேட்டை மரைக்காயர் தெரு 8 வது வார்டு குத்பா பள்ளிவாசல் எதிரே அமைந்துள்ள மின் கம்பத்தில் உள்ள மின் கம்பி முறிந்து நிற்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இப்பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் தொழுவதற்காக வந்து செல்கின்றனர். மேலும், அப்பகுதி இளைஞர்கள் பள்ளிவாசல் எதிரே உள்ள திடலில் தான் விளையாடி வருகின்றனர்.

ஆகவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மிக விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.