ஆசாத் நகர் இருசக்கர உதிரிபாக கடையில் மர்ம நபர்கள் கைவரிசை…

முத்துப்பேட்டை ஆசாத் நகர் இருசக்கர உதிரிபாக கடையில் மர்ம நபர்கள் கைவரிசை. பல ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு.

முத்துப்பேட்டை ஆசாத் நகரில் அன்வர்தீன் என்பவர் இருசக்கர உதிரிபாக கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் நேற்று முன் தினம் இரவு கடையை மூடி விட்டு மறுநாள் திறந்து பார்க்கையில் கடையில் உள்ள பொருட்கள் அலங்கோலமாக சிதறி கிடந்தது. கடையில் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் மற்றும் ரொக்க பணம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. மேலும், கடை மாடியில் உள்ள குடோவ்னில் பூட்டை உடைத்து மதிப்பு கணக்கிடமுடியதா பல பொருட்கள் திருடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அருகில் உள்ள மளிகை கடையிலும் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர்.

இது குறித்து அன்வர்தீன் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்கு பதிவு செய்து திருட்டு கும்பலை தேடி வருகின்றனர்.

முத்துப்பேட்டையில் முக்கிய பகுதியில் அரங்கேறிய இந்த திருட்டு சம்பவம் வணிகர்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.