தெற்குத்தெரு சக்கரப்பா காலனியில் மின் விளக்குகள் எரியவில்லை…

முத்துப்பேட்டை தெற்கு தெரு சக்கரப்பா காலனியில் மின் விளக்குகள் எரியவில்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு.

தெற்குத்தெரு சக்கரப்பா காலனியில் கஜா புயலுக்கு பின் பொருத்தப்பட்ட மின் விளக்குகள் இதுநாள் வரை எரியவில்லை. புகார் அளித்தும் பேரூராட்சி நிர்வாகத்தில் யாரும் கண்டுகொள்ளவில்லை, என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

பொதுமக்கள் இரவு நேரங்களில் சாலைகளில் மிகவும் அச்சத்துடன் கடைத்தெருக்களுக்கு சென்று வருகின்றனர். மேலும், திருட்டு சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருவதால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியில் செல்வதை பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர்.

பொதுமக்களின் நலன் கருதி பேரூராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.