தீவிரமாக நடந்து வரும் இரயில்வே பணிகள்…

முத்துப்பேட்டையில் தீவிரமாக நடந்து வரும் இரயில்வே பணிகள். பிரில்லியண்ட் பள்ளி அருகே உள்ள இரயில்வே கேட் சாலை பணிகள் முடிவு பெற்றது.

முத்துப்பேட்டையில் இரயில்வே பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இரயில் நிலைய பணிகள் 90 % முடிவு பெற்றுள்ள நிலையில் இரயில் சேவை அடுத்த மாதம் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிவேக சோதனை ஓட்டம் வருகின்ற மார்ச் 25 ஆம் தேதி நடைபெறும், என தகவல் வந்துள்ளது. இந்நிலையில் இரயில்வே கேட் சாலை தார் சாலையாக பாதுகாப்பு தண்டவாளங்கள் அமைத்து சாலை மட்டத்துக்கு ஏற்றவாறு சமன்செய்யும் பணி நேற்று பிரில்லியண்ட் பள்ளி அருகே நடைபெற்றது.

தார் போடப்பட்டு சமன் செய்யப்பட்ட சாலை.

அந்த கேட் பகுதியில் ஏற்கனவே ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த சாலை சமன் செய்யப்பட்டுள்ளதனால் பொதுமக்கள் அச்சமின்றி பயணிக்க ஏதுவாக அமைந்துள்ளது.