சேதமடைந்த குடிநீர் தேக்க தொட்டியை சரி செய்து தர வேண்டும்…

முத்துப்பேட்டை அருகே நாச்சிக்குளம் செறுபனையூறில் குடிநீர் தேக்க தொட்டி சேதமடைந்த நிலையில் நீர் கசிந்து வீணாகும் அவலம்.

செறுபனையூர் நடுத்தெரு பகுதியில் நீண்ட நாட்களாக சேதமடைந்த நிலையில் இருக்கும் குடிநீர் தேக்க தொட்டியை சரி செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த குடிநீர் தொட்டியின் மேற்புற சிமெண்ட் கான்கிரீட் உடைந்து உள்ளே உள்ள கம்பிகள் வெளியே தெரிகின்றது. மேலும், தொட்டியில் நீர் கசிவு அதிகமாக இருப்பதால் தண்ணீர் அதிகம் வீணாவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.