இறுதிகட்ட ஜல்லி கற்கள் கொட்டப்பட்ட தண்டவாளங்கள்…

முத்துப்பேட்டை பகுதியில் இரயில்வே பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

முத்துப்பேட்டை பகுதியில் தண்டவாளங்களுக்கு இறுதிகட்டமாக ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு அவைகள் பேக்கிங் இயந்திரம் மூலம் வழு ஊட்டப்பட்டது. தற்போது, இரயில்வே தண்டவாளங்கள் இறுதி கட்ட சோதனை ஓட்டத்திற்கு ஏற்ப தயாரான நிலையில் உள்ளது. வரும் ஜூலை மாதம் இரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிகட்ட சோதனை ஓட்டம் அதிவேகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் தண்டவாள பகுதிகளில் நிற்க வேண்டாம், என இரயில்வே துறை அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் தண்டவாள பணிகள் மற்றும் சோதனை ஓட்ட இரயில்களை பார்த்து செல்கின்றனர்.