பங்களா வாசல் அருகே சாக்கடை கால்வாய் பள்ளம் இன்று சரி செய்யப்பட்டது..

முத்துப்பேட்டை பங்களா வாசல் அருகே சாக்கடை கால்வாய் பள்ளம் இன்று சரி செய்யப்பட்டது.

முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை சாலை பங்களா வாசல் அருகே உள்ள குறுகிய சாலையில் நீண்ட நாட்களாக பள்ளமாக கிடந்த சாக்கடை கால்வாய் இன்று பேரூராட்சி நிர்வாகத்தால் சரி செய்யப்பட்டது.

அதற்கு முன்னர் வெறும் பனை மரங்களை கொண்டு அந்த பள்ளம் அடைக்கப்பட்டு இருந்தது. மிக முக்கிய சாலை என்பதால் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்ததன் எதிரொலியாக இன்று அந்த பள்ளம் பெரிய பாறை கற்களை கொண்டு அடைக்கப்பட்டது.