லாரி மோதி பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது…

முத்துப்பேட்டை ECR சாலை மங்களூர் அருகே லாரி மோதி பசுமாடு பரிதாபமாக உயிரிழந்தது.

மங்களூர் அருகே நேற்று இரவு ECR சாலை வழியாக வந்துகொண்டிருந்த லாரி பசுமாட்டின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அதிக இரத்தம் வெளியேறி பரிதாபமாக உயிரிழந்தது. நீண்ட நேரம் இரத்தம் வெளியேறி அதே இடத்தில் கிடந்து உயிரிழந்து இருக்கலாம் என அப்பகுதி மக்கள் நமது செய்தியாளர்களிடம் கூறினர்.

ஆடு மற்றும் மாடுகளை இரவு நேரங்களில் வீட்டில் கட்டிபோடாமல் சாலைகளில் அலையவிடுவது தான் இதுபோன்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. குறிப்பாக, ECR சாலைகளில் வாகனங்கள் அதிவேகத்தில் செல்லும்போது இது போன்ற விபத்துகள் அரங்கேறி வருகிறது.

கால்நடைகள் வைத்திருப்போர் இரவு நேரங்களில் தங்களின் ஆடு, மாடுகளை சாலைகளில் அலையவிடாமல் பாதுகாப்பான இடங்களில் கட்டிபோடுவதன் மூலம் இது போன்ற விபத்துகளை தவிர்க்கலாம்.