மணல் கடத்தல் கும்பலை வளைத்து பிடித்து போலீஸார் விசாரணை…

முத்துப்பேட்டை அருகே மணல் கடத்திய கும்பல் கைது.

முத்துப்பேட்டை பகுதிக்குள் மணல் கடத்தல் நடப்பதாக முத்துப்பேட்டை காவல் துறைக்கு தகவல் வந்ததன் அடிப்படையில் போலீஸார் கீழக்காடு ECR சாலையில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது பட்டுக்கோட்டை சாலை வழியாக முத்துப்பேட்டை நோக்கி வந்த லாரிகளை சோதனை செய்ததில் தம்பிக்கோட்டை பாமினி ஆற்றில் இருந்து முத்துப்பேட்டைக்கு மணல் திருடி கொண்டு வந்தது அம்பலமானது.

இதனை அடுத்து லாரி ஓட்டுனர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். பின்னர், 3 லாரிகளையும் பறிமுதல் செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.