
முத்துப்பேட்டையில் வேலை பார்த்து வந்த கோட்டுரை சேர்ந்த மெக்கானிக் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை.
முத்துப்பேட்டை பகுதியில் இருசக்கர வாகன கடையில் வேலை பார்த்து வந்த உலகநாதன் என்ற மெக்கானிக் கடந்த சில தினங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் வயிற்று வலி அதிகமான காரணத்தினால் உலகநாதன் வலியை தாங்க முடியாமல் ஆலங்காடு படித்துறையில் அமர்ந்து எலி மருந்தை சாப்பிட்டு அங்கேயே மயங்கி விழுந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கே முதலுதவி செய்யப்பட்டு, அவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் உலகநாதன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உலகநாதனின் தாய் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.