பசுமாடு மற்றும் கன்றுக்குட்டி மீது டெம்போ மோதி விபத்து…

முத்துப்பேட்டை அருகே உப்பூர் பகுதியில் ECR சாலையில் பசுமாடு மற்றும் கன்றுக்குட்டி மீது டெம்போ மோதி விபத்து.

உப்பூர் அருகே நேற்று மாலை ECR சாலையில் வேகமாக சென்ற டெம்போ சாலையை கடக்க முயன்ற பசுமாடு மற்றும் கன்றுக்குட்டி மீது மோதியது. இதில் கன்றுக்குட்டி பலத்த உள்காயத்துடன் சுயநினைவின்றி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தது. உடன் இருந்த மற்றொரு பசுமாட்டிற்கு காலில் காயம் ஏற்பட்டது. பசுமாடு மற்றும் கன்றுக்குட்டியை மோதிய உடன் டெம்போ டிரைவர் அந்த இடத்தை விட்டு தப்பி செல்ல முயற்சி செய்தார். இதனை அடுத்து அங்கு இருந்த முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மடக்கி பிடித்து விசாரித்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும், என்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

வாகனத்தில் செல்பவர்கள் கால்நடைகளையும் உயிராக மதிக்க வேண்டும். சாலைகளில் கால்நடைகள் கடக்க முயன்றால் வாகன ஓட்டிகள் அவைகள் கடக்கும் வரை பொறுமை காக்கலாம். அதே போன்று கால்நடை உரிமையாளர்கள் சாலைகளில் கால்நடைகளை திரியவிடாமல் பாதுகாப்பான இடங்களில் மேய விடலாம். இவைகளை பின்பற்றுவதன் மூலம் சாலை விபத்துகளை தவிர்க்கலாம்.