வண்ணம் பூசப்படாத வேகத்தடை வாகன ஓட்டிகள் கடும் அவதி…

முத்துப்பேட்டையில் வண்ணம் பூசப்படாத வேகத்தடையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி.

முத்துப்பேட்டையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரயில்வே கேட் பகுதியில் உள்ள சாலைகளில் போடப்பட்டுள்ள வேகத்தடைகளுக்கு வண்ணம் மற்றும் மிளிரும் தட்டுகள் அமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் கடுமையான அவதியைக் சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக சாலை விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆகவே, பொதுமக்கள் நலன் கருதி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.