இரயில் நேரம் நீட்டிப்பு, அடிப்படை வசதி மற்றும் சுரங்கப்பாதை குறித்து கோரிக்கை…

முத்துப்பேட்டை இரயில் உபயோகிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் திருச்சி கோட்ட மேலாளரை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தனர்.

முத்துப்பேட்டை இரயில் நிலையத்திற்கு அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டும். அதே போன்று இரயில்கள் அதிக நேரம் நின்று செல்ல வேண்டும், மற்றும் முன் பதிவு நேரத்தை அதிகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முத்துப்பேட்டை இரயில் உபயோகிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் பேசினர்.

மேலும், கொய்யா தோப்பு பகுதிக்கு சுரங்கப்பாதை அமைத்து தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. அனைத்து கோரிக்கைகளையும் கேட்டறிந்த திருச்சி கோட்ட மேலாளர் உதயக்குமார் ரெட்டி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.