மருதங்காவெளி அரசு நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா…

முத்துப்பேட்டை மருதங்காவெளி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது.

இந்த ஆண்டு விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாணிக்கம் இந்நிகழ்ச்சியில் தலைமை வகித்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினர்.

இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.