முத்துப்பேட்டையில் சூடு பிடித்துள்ள தேர்தல் பிரச்சாரம்…

முத்துப்பேட்டையில் சூடு பிடித்துள்ள தேர்தல் பிரச்சாரம்.

நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அமமுக -விற்கு ஆதரவாக SDPI கட்சி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இதற்கான பிரச்சாரங்கள் வீதி வீதியாக SDPI நகர உறுப்பினர்கள் அனைவரும் மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை உள்ள அனைத்து வணிகர்களிடமும் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் நடைபெற்றது. இதில் SDPI கட்சியின் மாவட்ட தலைவர் தப்ரே ஆலம் மற்றும் SDPI கட்சி நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் SDPI கட்சிக்கு அமோக வரவேற்பு அளித்தனர்.