முத்துப்பேட்டையில் வாக்கு சேகரிப்பின் போது ஏற்பட்ட விபரீதம்..

முத்துப்பேட்டையில் வாக்கு சேகரிப்பின் போது ஏற்பட்ட விபரீதம். அரசு பேருந்து மற்றும் ஜெனரேட்டர் இடையே சிக்கிய வாலிபர் மீட்பு.

முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் நேற்று வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து தேசிய குழு உறுப்பினர் டி. ராஜா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக அரசு பேருந்து பிரச்சாரத்திற்கு கொண்டு வந்த ஜெனரேட்டர் மீது மோதியது. இதில் இடையில் வாலிபர் சிக்கினார். திடீர் சலலப்பு கூச்சல் காரணமாக பேருந்து ஓட்டுநர் வண்டியை நிறுத்தி இறங்கி விட்டார்.

பின்னர், பேருந்து மற்றும் ஜெனரேட்டர் இடையே சிக்கிய அந்த நபரை முத்துப்பேட்டை சப் – இன்ஸ்பெக்டர் மற்றும் அருகில் இருந்தோர் மீட்டனர். சிக்கிய அந்த நபருக்கு எந்த வித பெரும் காயங்களும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். சம்பவ இடத்திலிருந்து பேருந்தை அவசர அவசரமாக ஓட்டுநர் எடுத்து தப்பி சென்று விட்டார்.

போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.