திருவாரூர் மாவட்ட 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்…

திருவாரூர் மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மாதம் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலை 9.30 மணியளவில் வெளியாகின. இந்த முடிவுகளில் திருவாரூர் மாவட்டத்தில் 93.3 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வி துறை கூறியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 214 பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 687 மாணவர்கள் மற்றும் 8 ஆயிரத்து 31 மாணவிகள் சேர்த்து மொத்தம் 15 ஆயிரத்து 718 பேர்கள் தேர்வு எழுதினர்.

இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 7 ஆயிரத்து 16 மாணவர்கள் மற்றும் 7 ஆயிரத்து 656 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 672 பேர்கள்.