முத்துப்பேட்டை பேரூராட்சி சார்பாக தண்ணீர் டேங்க்..!

முத்துப்பேட்டை பேரூராட்சி சார்பாக பழைய பேருந்து நிலையம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இரண்டு இடங்களில் புதிய தண்ணீர் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது.

கஜா புயலில் சேதமடைந்த தண்ணீர் டேங்க்கள் மாற்றப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டு இருந்தன. இந்நிலையில், 5 மாதம் கழித்து தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் டேங்க்கள் புதிதாக மாற்றப்பட்டு அவற்றுள் தண்ணீர் நிரப்பி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முத்துப்பேட்டை பேரூராட்சி பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இன்னும் சில முக்கிய இடங்களில் நீர் தொட்டி வைக்க வேண்டும், என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.