வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை..!

முத்துப்பேட்டை அருகே வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை. வழக்கு பதிவு செய்த போலீஸ், திருட்டு கும்பலுக்கு வலைவீச்சு.

முத்துப்பேட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு கிராம பகுதியை சேர்ந்தவர் தவமணி (62). இவர் சம்பவம் நடைபெற்ற இரவு தன்னுடைய உறவினர் வீட்டிற்கு தங்குவதற்கு சென்றுள்ளார். தன்னுடைய பூட்டிய வீட்டை மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது மர்ம நபர்களின் கைவரிசை தெரியவந்தது.

வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த வெள்ளி பாத்திரங்கள், மோதிரம் மற்றும் சில பொருட்கள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த தவமணி முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீஸார், இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.