சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை – இருவர் கைது.!

முத்துப்பேட்டை அருகே வெவ்வேறு பகுதிகளில் மது விற்பனை செய்த இருவர் கைது.

முத்துப்பேட்டை போலீஸார் நேற்று தில்லைவிளாகம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் மது விற்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை வாங்கி சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்வது தெரியவந்தது. இதனை அடுத்து போலீஸார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அதே போல் நாச்சிக்குளம் பகுதியில் முத்துப்பேட்டை போலீஸார் சோதனையில் ஈடுபட்ட போது மகாலிங்கம் என்பவர் மது விற்பனை செய்வது தெரியவந்தது. இதனை அடுத்து அவரை கைது செய்து அவரிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.