திருவாரூர் மாவட்ட 11 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம்.!!

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவாரூர் மாவட்டம் 93.4 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

தமிழகத்தில் நேற்று 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் திருவாரூர் மாவட்டம் 93.4 % தேர்ச்சி பெற்றுள்ளது. மொத்தம் 13 ஆயிரத்து 224 மாணவ, மாணவிகள் எழுதிய இந்த தேர்வில், 12 ஆயிரத்து 357 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும், அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 25 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.