புறக்கணிக்கப்படும் முத்துப்பேட்டை இரயில் நிலையம் – மாபெரும் போராட்டம் அறிவிப்பு.!!

முத்துப்பேட்டை இரயில் நிலையத்தின் தரம் உயர்த்தப்பட வேண்டும், உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

சுமார் 120 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த முத்துப்பேட்டை இரயில் நிலையம் தற்போது தரம் குறைக்கப்பட்டு அதன் பொழிவை இழந்து காணப்படுகிறது. இந்த இரயில் நிலையம் வெள்ளையர்கள் காலத்தில் கட்டப்பட்டது ஆகும். அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் இரயில்வே துறைக்கு அதிக வருவாய் ஈட்டிதந்த இரயில் நிலையங்களில் முத்துப்பேட்டை இரயில் நிலையமும் ஒன்று. B கிரேடில் இருந்த இரயில் நிலையம் தற்போது ஹால்ட் ஸ்டேஷனாக தரம் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் 3 கிராசிங் அமையபெற்று கம்பீரமாக இருந்த இந்த இரயில் நிலையம் தற்போது வெறும் ஒரே பாதையில் வெறிச்சோடி காணப்படுகிறது.

இரயில் உபோயோகிப்பாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த தரம் குறைப்பிற்க்கு எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் அடிக்கடி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து இரயில்வே துறையால் புறக்கணிக்கப்படும் முத்துப்பேட்டை பகுதி இரயில் நிலையத்தோடு முடியவில்லை, முக்கியமான இரண்டு இடங்களில் தரைப்பாலம் அமைக்கப்படமால் இழுபறியில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகள்:


1. இரயில் நிலையத்தின் தரம் உயர்த்தப்பட்ட வேண்டும்.

2. ஸ்டேஷன் மாஸ்டர் பணியமர்தப்பட வேண்டும்.

3. கொய்யா தோப்பு மற்றும் கால்நடை மருத்துவமனை ஆகிய பகுதிகளில் தரைப்பாலம் வேண்டும்.

4. எக்ஸ்பிரஸ் ரயில் சேவை வேண்டும்.


இன்னும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முத்துப்பேட்டை இரயில்வே உபோயோகிப்பாளர்கள் சங்கம் நடத்தும் இந்த மாபெரும் போராட்டம் வருகின்ற ஜூன் மாதம் 9 ஆம் தேதி ஞாயிற்று கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பாரபட்சம் காட்டப்படும் முத்துப்பேட்டை பகுதிக்கு விடிவு காலம் ஏற்பட, இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.