ரமலான் மாதத்தில் தொடரும் மின்வெட்டு.!

முத்துப்பேட்டையில் ரமலான் மாதத்தில் தொடரும் மின் வெட்டு – பொதுமக்கள் குற்றச்சாட்டு.!

முத்துப்பேட்டையில் குறிப்பாக ரமலான் மாதத்தில் மட்டும் மின் வெட்டு அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் முத்துப்பேட்டை நகர பகுதிகளில் இரவு நேரங்கள் மற்றும் மதிய வேளைகளில் அதிகமாக மின் வெட்டு இருப்பதாகவும் இதனால் நோன்பு நோற்ப்பவர்கள் பெரும் அவதியை சந்தித்து வருவதாகவும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் இந்த தொடர் மின் வெட்டு அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது.

மேலும், பல பகுதிகளில் மின் விளக்குகள் சரிவர எரியவில்லை. இரவு நேரங்களில் பள்ளிவாசல்களுக்கு தொழுகையை நிறைவேற்ற செல்வதற்கு மிகவும் சிரமமாக இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவாக மின் விளக்குகளை சரி செய்ய வேண்டும் மேலும், அறிவிக்கப்படாத மின் வெட்டுக்களை தவிர்க்க வேண்டும், என்பது முத்துப்பேட்டை பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.