மனைவியுடன் தகராறு காரணமாக கணவன் தற்கொலை.!

முத்துப்பேட்டை மஜீதியா தெருவை சேர்ந்த ஹாஜா மைதீன் என்பவர் மனைவியுடன் தகராறு காரணமாக தற்கொலை.!

முத்துப்பேட்டை மஜீதியா தெருவில் வசித்து வரும் ஹாஜா மைதீன் என்பவர் நாகை மாவட்டம் திருப்பூண்டியை சேர்ந்தவர். இவருக்கு வயது 40. இவர் முத்துப்பேட்டை மஜீதியா தெருவை சேர்ந்த பெண்ணை ( ஃபாருக் பானு) திருமணம் செய்து இங்கேயே வசித்து வந்தார். மேலும், முத்துப்பேட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை பகுதியில் கறி கடை நடத்தி வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வேளையில் முத்துப்பேட்டை ECR சாலை சில்லாடி குளம் அருகே ஹாஜா மைதீன் இறந்து கீழே கிடப்பதை கண்ட சிலர் முத்துப்பேட்டை காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஹாஜா மைதீன் சொந்த ஊரான திருப்பூண்டிக்கு சென்று மீண்டும் முத்துப்பேட்டைக்கு திரும்பியதாகவும், பின்னர் குடி போதையில் வீட்டுக்கு சென்று மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாகவும், அதன் பின்னர் ஹாஜா மைதீன் வீட்டிற்கு திரும்ப வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து முத்துப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.