ஏனோ – தானோ என்று போடப்படும் தரமற்ற சாலைகள் – பேரூராட்சி அலுவலகம் முற்றுகை.!

முத்துப்பேட்டை பகுதிகளில் ஏனோ – தானோ! என்று போடப்படும் சாலைகள். முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை இட்டனர்.

முத்துப்பேட்டை பேரூராட்சி சார்பில் முத்துப்பேட்டை பகுதி முழுவதும் சாலை போடும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆசாத் நகர், ரஹ்மத் நகர் மற்றும் மருதங்காவெளி தோப்பு ஆகிய பகுதிகளில் ரூபாய். 5 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை போடும் பணி நடந்து வருகிறது. இதற்காக சாலைகளில் தேங்கி உள்ள குப்பைகள், கழிவுகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் சாலை போடும் பணி துவங்கியதால் அப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி முற்றுகையிட்டனர்.

குப்பைகள் சாலையின் மேல் கிடக்கும் அவலம்.!
கழிவு நீர் கால்வாய் சீரமைக்கப்படாமல் நடைபெறும் சாலை போடும் பணி.!

இதனை அடுத்து பேரூராட்சி முதல் நிலை அலுவலர் ராஜேந்திரனிடம் இந்த பொறுப்பற்ற பணி தொடர்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதனை ஏற்று கொண்ட ராஜேந்திரன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதனால் முற்றுகைகாரர்கள் கலைந்து சென்றனர்.

இதன் காரணமாக முத்துப்பேட்டை பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.