
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 3ஆம் தேதி அரசு பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில், ஜூன் 7ஆம் தேதிதான் பள்ளிகள் திறக்கப்படும் என சமூக வலைதளங்களில் வேகமாக வதந்தி பரவி வருகிறது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் கூறுகையில், திட்டமிட்டபடி பள்ளிகள் ஜூன் 3ஆம் தேதி திறக்கப்படும். ஜூன் 7ஆம் தேதிதான் பள்ளிகள் திறக்கப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை மாணவர்களும், பெற்றோர்களும் நம்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், வெயிலின் தாக்கத்தால் பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றுவதற்கு வாய்ப்பில்லை எனவும் தெளிவுப்படுத்தியுள்ளார். மேலும், இந்த ஆண்டில், மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்கள் சீராக இருக்குமாறு பள்ளிக்கல்வித்துறை அட்டவணை தயாரிக்குமாறு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.