முத்துப்பேட்டை ஆலங்காடு பகுதி கோரையாற்றில் மணல் திருட்டு..!

முத்துப்பேட்டை ஆலங்காடு வள்ளுவர் நகர் பகுதியில் உள்ள கோரையாற்றில் மணல் திருட்டு தொடர்ந்து நடைபெற்று வருவதாக அப்பகுதியை சேர்ந்த ஒருவர் நம் தளத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த மணல் திருட்டு சம்பவம் தொடர்ந்து 2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருவதாகவும், அரசு அதிகாரிகள் சரியான முறையான நடவடிக்கை எடுக்காததால், இந்த சம்பவம் தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருப்பதாகவும் அவர் கூறினார். திருட்டில் ஈடுபடுபவர்கள் இருசக்கர வாகன உதவியுடன் மூட்டை, மூட்டையாக ஆற்று மணலை திருடி செல்வதாக புகார் அளித்துள்ளார்.

காணொளி :

சட்டத்திற்கு புறம்பான நடைபெறும் இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக அரசு விரைந்து நடைவடிக்கை எடுக்க வேண்டும், என்று ஆலங்காடு பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புகைப்படம்:

திருடப்படும் மணல் மூட்டைகளில் எடுத்து செல்லப்படுகின்றன