முத்துப்பேட்டையில் போராட்டம்..!

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக முத்துப்பேட்டையில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பாக கண்டன போராட்டம் நடைபெற்றது.

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் அதற்கான ஆரம்ப பணிகள் தொடங்கி வருகின்றன. சமீபத்தில் நாகை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் கெயில் குழாய்கள் அமைக்கும் பணி துவங்கியதால் அப்பகுதியில் போராட்டம் வெடித்தது.

இதனை அடுத்து பல்வேறு அமைப்புகள் இதற்கு எதிராக போராடி வருகின்றனர். இந்நிலையில் முத்துப்பேட்டை ஒன்றிய விவசாய சங்க செயலாளர் யோகநாதன் அவர்கள் தலைமையில் நேற்று முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இதில் நாகை MP. செல்வராசு அவர்கள் கலந்து கொண்டு கண்டன கோசங்கள் எழுப்பினார்.

மேலும், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.