முத்துப்பேட்டை துப்புரவு பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி ரம்ஜான் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட மஜக.!

MJK Party Gives Sweet to Cleaning Staffs

ரம்ஜான் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் விதமாக முத்துப்பேட்டை பேரூராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்பட 80 நபர்களுக்கு மஜக முத்துப்பேட்டை நகரம் சார்பில் நேற்று இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் பால்கார மைதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மஜகவின் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதீன் அவர்கள் துப்புரவு பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மேலும், நகர பொருளாளர் பசீர் அலி, சேக் அலாவுதீன், ஓடாவி மைதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.

படங்கள்:

MJK Party Gives Sweet to Cleaning Staffs 2

MJK Party Gives Sweet to Cleaning Staffs 3

மகிழ்ச்சியுடன் இனிப்புகளை பெற்றுக்கொண்ட துப்புரவு பணியாளர்கள் மஜக நிர்வாகிகளுக்கு நன்றியையும், நோன்பு பெருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.