கந்தூரி ஊர்வலத்தில் இளைஞருக்கு கத்திக்குத்து!

முத்துப்பேட்டை கந்தூரி ஊர்வலத்தில் இளைஞர் ஒருவருக்கு கத்திக்குத்து. கைது செய்து போலீஸார் விசாரணை.

அரபு சாஹிப் பள்ளி கந்தூரி விழா ஜூன் 6 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஆசாத் நகரை சேர்ந்த இளைஞர் முகமது தன்வீர்(24) என்பவர் குடி போதையில் ஆட்டம் போட்டு கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து திமிலத் தெருவை சேர்ந்த அப்துல் ரஹ்மான்(23) என்ற இளைஞர் தன்வீரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தன்வீர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை குத்த முயன்றுள்ளார்.

சுதாரித்து கொண்ட அப்துல் ரஹ்மான் தடுக்க முயன்றார். அப்போது காது மற்றும் விரல் பகுதிகளில் கத்தி பாய்ந்து காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தன்வீரை முத்துப்பேட்டை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Source – Dinakaran