மின்சாரத்தை ‘நிறுத்தி நிறுத்தி’ விளையாடிய மின் வாரியம் – கோபத்தின் உச்சத்திற்கு சென்ற பொதுமக்கள்.!

முத்துப்பேட்டையில் நேற்று இரவு (14-06-2019) சுமார் 80 முறைக்கு மேல் மின்சாரத்தை நிறுத்தி விளையாடிய மின்சார வாரியம்.

முத்துப்பேட்டையில் ரமலான் மாதத்தில் இருந்து பவர் கட் ஃபார்முலா தொடர்ந்து கொண்டே வருகிறது. இதில் உச்சகட்டமாக நேற்று இரவு 10 மணியிலிருந்து தொடங்கிய பவர் கட் வேட்டை விடிய விடிய சுமார் 80 தடவைகளுக்கு மேலாக, முத்துப்பேட்டை மின்சார வாரியம் விளையாடியதில் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயதானோர் கடுமையான அவதிக்கு ஆளானார்கள்.

பவர் கட் இன்று ( 15-06-2019) என்று அறிவிப்பு செய்து, இரவு முழுவதும் பவர் கட் செய்ததால் முத்துப்பேட்டை மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.