முத்துப்பேட்டையில் ஆட்டோ ஓட்டுனர்கள் மழை வேண்டி சிறப்பு தொழுகை.!

முத்துப்பேட்டையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை பிரார்த்தனை நடைபெற்றது.

தமிழகத்தில் மழை இல்லாத காரணத்தால் பல்வேறு பகுதிகளில் வறட்சி மற்றும் தண்ணீர் இல்லா திண்டாட்டம் நிலவி வருகிறது. இதை கருத்தில் கொண்டு பல இடங்களில் சிறப்பு பிரார்த்தனைகள், யாகங்கள் மற்றும் தொழுகைகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு பகுதியாக முத்துப்பேட்டை செக்கடி குளம் அருகே இஸ்லாமியர்கள் சார்பாக தொழுகை பிரார்த்தனை நடைபெற்றது.

முத்துப்பேட்டை செக்கடிக்குளம் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பாக நேற்று மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஏராளமானோர் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர். இதில் அக்குபஞ்சர் மருத்துவர் அப்துல் ரஹ்மான், அவர்கள் சிறப்பு தொழுகை நடத்தி பிரார்த்தனை செய்தார்.