பேட்டை சாலையில் போலீஸ் படையுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்; ஒருதலைப் பட்சமாக அதிகாரிகள் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!

முத்துப்பேட்டை பேட்டை சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதிகாரிகள் பாரபட்சத்துடன் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

நேற்று (22-06-2019) வருவாய் ஆய்வாளர் கஜேந்திரன் அவர்களின் தலைமையில், முத்துப்பேட்டை போலீசார் பாதுகாப்புடன் பேட்டை ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காம்பவுண்டு சுவர் மற்றும் கடைகள் JCB உதவியுடன் இடித்து தள்ளப்பட்டது. அப்போது வீட்டு உரிமையாளர்களுக்கு, அதிகாரிகளுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

வீடியோ:https://www.youtube.com/watch?v=sCi9QLGj9Ds

‘முறையான ஆவணங்கள் இருக்கும் போது எப்படி இடிக்கலாம்? என்றும் முத்துப்பேட்டையில் அனைத்து பகுதியிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், இல்லையென்றால் வழக்கு தொடருவோன்’, என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து அதிகாரிகள் தொடர்ந்து வீட்டு சுவர்கள், கடைகள் மற்றும் படிகளை இடித்து தள்ளினர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

பொதுமக்கள் ஒன்று கூடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.