முத்துப்பேட்டை செக்கடி குளம் கரை பகுதி சுத்தம் செய்யப்பட்டது.!

முத்துப்பேட்டையில் செக்கடி குளம் கரை பகுதியில் உள்ள செடி கொடிகள் மற்றும் மணல்கள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

முத்துப்பேட்டையில் நிலத்தடி நீர் பாதுகாப்பு குழுவின் கோரிக்கையை ஏற்று இன்று பேரூராட்சி நிர்வாகம் செக்கடிகுளம் பகுதியில் மழைநீரை சேகரிக்கும் வகையில் JCB இயந்திரம் மூலமாக வடிகால் பகுதியில் சுத்தம் செய்யப்படாமல் கிடந்த செடி கொடிகளை அப்புறப்படுத்தி மழைநீர் செல்லும் வண்ணம் வழிவகை செய்யப்பட்டது.

செக்கடி குளம் அருகே பட்டுக்கோட்டை செல்லும் சாலை ஓரத்தில் நீண்ட நாட்களாக குவிந்து கிடந்த மணலும் அப்புறப்படுத்தப்பட்டு வாகனங்கள் இடையூறு இல்லாமல் செல்லக்கூடிய அளவிற்கு சாலை சரி செய்யப்பட்டது.

பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் சாலை இது என்பது குறிப்பிடத்தக்கது.