மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் கைது – லாரிகள் பறிமுதல்!

முத்துப்பேட்டை அருகே தில்லைவிளாகம் பகுதி ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் கைது

முத்துப்பேட்டை அருகே தில்லைவிளாகம் பகுதி ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் கைது. மேலும், லாரிகள் பறிமுதல்.

தில்லைவிளாகம் கிளந்தாங்கி ஆற்றில் மணல் திருட்டில் சிலர் ஈடுபடுவதாக முத்துப்பேட்டை போலீஸாருக்கும் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து முத்துப்பேட்டை போலீஸார் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது போலீஸார் மணல் திருட்டில் ஈடுபட்ட லாரிகளை மடக்கி பிடித்து, அந்த லாரி டிரைவர்களை கைது செய்தனர். மேலும், லாரிகளை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மணிகண்டன் (28), உதுமான் அலி (30) மற்றும் சங்கர் (42) ஆகிய மூன்று பேரையும் போலீஸார் திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜல் படுத்தினர்.