குட்டியார் பள்ளிவாசல் எதிரே சுவர் இடிந்து விழுந்ததில் கூலி தொழிலாளி பலி!

முத்துப்பேட்டை பேட்டை சாலை குட்டியார் பள்ளிவாசல் எதிரில் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி ஒருவர் பலி.

பேட்டை சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. இதில் குட்டியார் பள்ளிவாசல் எதிரே உள்ள கடைகள் ஆக்கிரமிப்பு பெயரில் இடித்து தள்ளப்பட்டன.

இந்நிலையில், அப்பகுதியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த கூலி தொழிலாளி சேகர் என்பவர் மீது எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இவர் முத்துப்பேட்டை அருகே உள்ள செறுபட்டாக்கரை என்ற பகுதியை சேர்ந்தவர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.