பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட பொதுமக்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு!

முத்துப்பேட்டை 2 வது வார்டு பகுதி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

முத்துப்பேட்டை ரஹ்மத் நகர் தவ்ஹீத் பள்ளிவாசல் அருகே பழுதாகி உள்ள கழிவுநீர் குழாய்களை சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், மேலும், அதன் காரணமாக குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவுவதாகவும் புகார் கூறி இன்று அப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சியை முற்றுகையிட ஒன்று கூடினர்.

மேலும், சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை தினமும் அகற்ற கோரியும், முன்பு வழக்கத்தில் இருந்தது போல் துப்பரவு தொழிலாளர்கள் தினந்தோறும் வீடுகளுக்கு வருகை தந்து குப்பைகளை வாங்கிச் செல்ல வழிவகை செய்துதர கோரியும் பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.