முத்துப்பேட்டை பிரில்லியன்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா!

முத்துப்பேட்டை தேசிய ஒருமைப்பாட்டு இயக்கமும், பிரில்லியன்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியும் இணைந்து நடத்தும் 73 ஆம் ஆண்டு இந்திய நாட்டின் சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை பள்ளியின் தாளாளர் A.முகமது யாகூப் அவர்கள் தலைமை தாங்கினார். மேலும், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் Dr. மீரா உசேன் அவர்கள் கொடியேற்றி நிகழ்ச்சியை சிறப்பாக தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் பேச்சுப் போட்டிகள் ஆகியவை சிறப்பாக நடைபெற்றது. இதில் அனைத்து மாணவ மாணவியர்களும், ஆசிரியர்களும், மேலும் பெற்றோர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கூடுதலாக, பள்ளி வாகனத்தில் குழந்தைகளுக்கு கடந்த 16 வருடமாக பாதுகாவலராக பணியாற்றிய S.மருதுபாண்டியன் அவர்களின் கடமையில் நேர்மையை பாராட்டி பள்ளியின் தாளாளர் ரூ 50,000 காசோலையை வழங்கி பாராட்டினார்.

காசோலையை பெற்றுக்கொண்ட மருது பாண்டியன் மகிழ்ச்சி ததும்ப தனது நன்றியை பள்ளி நிர்வாகத்திற்கு தெரிவித்தார்.

பிரத்யேக படங்கள்: