முத்துப்பேட்டை பிரில்லியண்ட் பள்ளி மாணவன் பேச்சுப் போட்டியில் 3 ஆம் இடம்!

முத்துப்பேட்டை பிரில்லியண்ட் பள்ளி மாணவன், ரஹ்மத் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற பேச்சு போட்டியில் 3 ஆம் இடம் பிடித்தார்.

முஹம்மது முகைதீன் என்ற 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ரஹ்மத் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தமிழ்த்தாத்தா ஊ.வே.சா தமிழ் இலக்கிய மன்ற விழாவில் கலந்துகொண்டு சிறப்பாக பேசி 3 ஆம் இடத்தை பிடித்து பாராட்டையும், பரிசையும் வென்றார்.

இந்த வெற்றி தன்னுடைய பள்ளிக்கு கிடைத்த பெருமை, என்று பிரில்லியண்ட் பள்ளி நிர்வாகிகள் முகைதீனை பாராட்டி வருகின்றனர்.