ஒருநாள் பெய்த மழைக்கே ஆங்காங்கே குட்டை போல் தேங்கி நிற்கும் மழைநீர்!!

முத்துப்பேட்டை ஒன்றியம் கீழநம்மங்குறிச்சி கிராம பகுதியில் உள்ள தார்ச்சாலை நேற்று பெய்த மழையில் சிறு குட்டையாக உருமாறி உள்ளது. பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி.

குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் என அனைவரும் மிகுந்த சிரமத்துடன் இந்த பகுதியை கடந்து வருகின்றனர். குறிப்பாக மழைநேரத்தில் சொல்லவே வேண்டியதில்லை, அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக அவ்வழியாக முத்துப்பேட்டை செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் சாலையை கடந்து செல்கின்றனர். இச்சாலை வழியாக மேலநம்மங்குறிச்சி, சிரமேல்குடி, மதுக்கூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகையால் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் சாலை சீரமைப்பு செய்ய போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் நலன்கருதி விடுதலை சிறுத்தைகள் கட்சி முத்துப்பேட்டை ஒன்றியச் செயலாளர் செ.மீனாட்சி சுந்தரம் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.