முத்துப்பேட்டை பகுதியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!!

முத்துப்பேட்டையில் இன்று விநாயகர் ஊர்வலம் காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இன்று செப்டம்பர் 6 முத்துப்பேட்டை பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற இருப்பதால் பாதுகாப்பு நடவடிக்கையாக முத்துப்பேட்டையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதில் முத்துப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 18 அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல், 5 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

கூடுதலாக முத்துப்பேட்டை பகுதியில் உள்ள 5 தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.