முத்துப்பேட்டை அருகே ‘நாம் தமிழர் கட்சி’ சார்பில் 750 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.!

முத்துப்பேட்டை அருகே உப்பூர் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பனை விதை நடவு செய்யப்பட்டது.

முத்துப்பேட்டை ஒன்றியம் உப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோரையாற்று கரை மற்றும் பிள்ளையார் கோவில் குளக்கரை பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சுமார் 750 பனை விதைகள் முதற்கட்டமாக நடவு செய்யப்பட்டது.

Palm Seed

இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பனை விதைகளை நடவு செய்தனர்.