முத்துப்பேட்டையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டது..!!

முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு ரூ. 2.10 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் தேதி முத்துப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஜா புயல் கோரத்தாண்டவம் ஆடியது. இதில் பலர் தங்கள் உடைகளையும், உடமைகளையும், இருப்பிடங்களையும் இழந்து நிர்கதியாய் விடப்பட்டனர்.

இந்நிலையில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் முத்துப்பேட்டை பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 156 பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் சுமார் 2.10 லட்சம் ரூபாய் செலவில் வீடு கட்டித்தர நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் ஆணை வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 156 பயனாளிகளுக்கும் ஆணை வழங்கப்பட்டது. சான்றிதழை, மங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் மங்கள் அன்பழகன் அவர்கள் வழங்கினார்.

உடன்  மாநில செயலாளர், அபுபக்கர் சித்திக் மற்றும் எஸ்டிபிஐ கட்சி முத்துப்பேட்டை நகர தலைவர் பாட்சா ஆகியோர் கலந்து கொண்டனர்.