முத்துப்பேட்டையில், 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட பேட்டை சாலையை சரிசெய்யக் கோரி உண்ணாவிரத போராட்டம்!!

முத்துப்பேட்டை, பேட்டை சாலை சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டு, குண்டும் குழியுமாக கேட்பாரற்று கிடக்கும் அவலம் தொடர் கதையாய் உள்ளது.

வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலான சாலை என்றால் அது பேட்டை சாலை தான், அந்த அளவிற்கு குண்டும், குழியும் இந்தச் சாலையில் அதிகம். மழை நாட்களில் சிறு சிறு குட்டைகளை சட்டென்று தயார் செய்யும் அளவிற்கு மிக மோசமான சாலை என்ற வெறுப்பை முத்துப்பேட்டை வாசிகள் மத்தியில் பெற்றது என்றால் அது மிகையாகாது.

இவற்றை சரி செய்ய கோரி முத்துப்பேட்டை மக்கள் பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், முத்துப்பேட்டை பேரூராட்சியை கண்டித்து SDPI கட்சி சார்பில் பேட்டை சாலை அமைக்கும் வரை மாபெரும் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.

இந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் முத்துப்பேட்டை நகர தலைவர் அஹமத் பாட்சா அவர்கள் தலைமை தாங்க உள்ளார்.

நடைபெறும் நாள்: 23-09-2019

இடம் : முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் அருகில்.

நேரம் : காலை 10 மணி